tamilni 73 scaled
உலகம்செய்திகள்

புடினைப்போலவே தோற்றமளிக்கும் மூன்றுபேர்… விரைவில் கொல்லப்படலாம் என உக்ரைன் தகவல்

Share

புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புடின் இறந்துவிட்டதாகவும், புடினுக்கு பதிலாக, அவரைப்போல் தோற்றமளிக்கும் ஒருவர்தான் பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளரான Andriy Yusovம், புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புத்தாண்டையொட்டி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின் உண்மையில் புடின் இல்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தோற்றம் என்றும் பலர் கூறியுள்ளனர்.

புடினுடைய கழுத்து அவருடைய உடலுடன் பொருந்தாதது போல் காட்சியளித்ததாக அந்த உரையைக் கேட்டவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேரும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளரான Andriy Yusov தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒருபோதும் சேர்ந்து இருப்பதில்லை என்றும், அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படம் எதுவும் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எப்போது அவர்களுடைய தேவை முடியுமோ, அப்போது அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் Andriy Yusov தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவைப் பொருத்தவரை தேவையில்லாதவர்களை கொன்றுவிடுவது பெரிய விடயமே அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...