உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

image 29c6aa6e37

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில், ட்ரோன்கள் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளில் விழுந்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிக்கொப்டர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் காயமடைந்த மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

இந்த தாக்குதலில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version