ஒமிக்ரோன் மாறுபாட்டின் முதலாவது முப்பரிமாணப் படத்தினை ரோமில் உள்ள கெசு மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ளது.
இவ் முப்பரிமாண படம் டெல்டா வைரஸ் மாறுபாட்டை விட அச்சமூட்டும் வகையில் இரு மடங்கு பிறழ்வுகள் இருப்பதை வெளிக்காட்டுகின்றது.
அதாவது இவ் ஒமிக்ரோனில் மனித உயிரணுக்களுடன் தொடர்புகொள்ளும் புரதம் ஒரு பகுதி முழுவதும் குவிந்துள்ளது.
இப் படம் பொட்ஸ்வானா தென்னாபிரிக்கா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆய்வில் இருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப் படத்தின் மூலம் ஒமிக்ரோன் மாறுபாட்டில் புரதத்தின் கட்டமைப்பு வலது புறத்திலும் டெல்டா மாறுபாட்டில் புரதத்தின் கட்டமைப்பு இடது புறத்திலும் இருப்பதை காணலாம்.
ஆகவே இப் பிறழ்வுகள் பரிமாற்றத்தில் அல்லது தடுபூசிகளின் செயல்திறனில் மாற்றத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பதை ஆய்வக சோதனைகள் மூலமே கண்டறியலாம் என இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழுவின் அறிக்கை கூறுகின்றது.
#WorldNews