சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
அதாவது, அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் என்பவரே சர்வதேச நாணய நிதியத்துக்கு முதலாவது பெண்துணை நிர்வாக இயக்குநராக நியமனம் பெற்றுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இவர் இந்திய அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் ஐ.எம்.எச் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பேரினப் பொருளியல் ஆராய்ச்சி முறைகளைக் முதன்மைப்படுத்திய இவர், தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பண்நாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். அத்தோடு, கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இவ் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில் தொடர்ந்து குறித்த தலைமை பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட உள்ளமை பாராட்டுக்குரியது.
#WorldNews