medium 2023 09 22 b76a50e861
உலகம்செய்திகள்

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐபோன்-15’ -யை வாங்கிய இளைஞர்

Share

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐபோன்-15’ -யை வாங்கிய இளைஞர்

அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐ போன்-15’ -யை வாங்கியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் ஐபோன்-15 என்ற மாடல் இந்தியாவில் நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனை நிலையங்களில் கூட்டம் களைகட்ட தொடங்கியது.

இதில், வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினத்தில் இருந்தே ஐபோனை வாங்குவதற்காக குவியத் தொடங்கினர்.

அந்தவகையில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஐபோன் விற்பனை நிலையத்தில் கூட்டம் அதிகமாகி, வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐபோனை வாங்கிய முதல் நபர்
அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் உள்ள ஐபோன் விற்பனை நிலையத்தில் 17 மணிநேரம் வரிசையில் நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஜபோன்-15 -யை வாங்கியுள்ளார்.

இது குறித்து அந்த இளைஞர் கூறும்போது, “இந்த போனை வாங்குவதற்காக நேற்று மாலை 3 மணி முதல் இருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் வாங்குவதற்காக 17 மணிநேரம் வரிசையில் நின்று, முதல் நாளிலே வாங்கியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...