உலகம் அடுத்தடுத்த பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.
எமது வாழ்வாதாரத்தை முடக்கும் பெருந்தொற்றுக்கள் இறுதியானவை என்று கூறிவிட இயலாது.
கொரோனாவை விட மிக மோசமான உயிர் கொல்லியை உலகம் சந்திக்க நேரிடலாம். எதிர்வரும் காலம் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை கொரோனா தடுப்பூசிகள் சென்றடைவதில்லை. ஆனால் வளமான நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கின்றனர். இது வேதனைக்குரிய விடயம்.
பெருந்தொற்று காலத்தில் எமக்கு கிடைத்த அறிவியல் முன்னேற்ற அறிவை நாம் தொலைத்து விடக்கூடாது.
தடுப்பூசி விடயத்தில் சமத்துவம் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#WorldNews
Leave a comment