உலகம்செய்திகள்

கலர் கலராக வளையல் போட்ட மனைவி.., கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் மாமியார்

Share
23 6558a30e71372 md
Share

கலர் கலராக வளையல் போட்ட மனைவி.., கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் மாமியார்

மும்பையில், கலர் கலராக வளையல் போடும் மனைவியை கண்மூடித்தனமாக கணவரின் குடும்பம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், “எனது கணவர் பிரதீப் ஆர்கடே (30) நான் மாடர்னாக வளையல் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து தகராறு செய்துவந்த நிலையில், நவம்பர் 13 -ம் தேதியன்று வாக்குவாதம் முற்றியது. இதில் என்னுடைய 50 வயது மாமியார் தலைமுடியைப் பிடித்து அறைந்தார். எனது கணவர் பெல்ட்டை வைத்து அடித்தார். என் கணவரின் உறவினர் பெண் ஒருவரும் தரையில் தள்ளி விட்டார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் படி, பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் உறவினர் பெண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ததாக பொலிஸார் ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்காக நவி மும்பைக்கு மாற்றப்பட்டது.

இதில் பெண்ணை தாக்கியவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 34 (பொது நோக்கம்), 504 (உட்போர்த்தனமான அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...