2 13 scaled
உலகம்செய்திகள்

அதிவேகமாக வந்து உணவகத்திற்குள் புகுந்த லொறி! 4 பேர் உடல் நசுங்கி பலி

Share

அதிவேகமாக வந்து உணவகத்திற்குள் புகுந்த லொறி! 4 பேர் உடல் நசுங்கி பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த லொறி, சாலையோர உணவகத்திற்குள் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் இடாவாஹ் மாவட்டத்தில் கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் பாரிய விபத்து ஏற்பட்டது.

சாலையோர உணவகத்தில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று அதிவேகத்தில் வந்து உணவத்திற்குள் புகுந்தது.

இதில் உணவக உரிமையாளர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவம் இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக, விபத்தினை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...