tamilni 75 scaled
உலகம்செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன்! அதிர வைத்த காரணம்

Share

விஜய்சேதுபதி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன்! அதிர வைத்த காரணம்

மது வாங்க பணம் தராததால் 71 வயது தாயை அவரது மகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் காசம்மாள் (71).

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அருகேயுள்ள ஆனையூரைச் சேர்ந்த இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் நமகோடி மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நமகோடி தனது பெற்றோருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி மது வாங்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம், தூங்கிக்கொண்டிருந்த தாயை எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவருக்கு காசம்மாள் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, நமகோடி ஆத்திரத்தில் கட்டை ஒன்றால் தாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காசம்மாள், அங்கேயே கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காசம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மகன் நமகோடியையும் பொலிஸார் கைது செய்தனர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...