27
உலகம்செய்திகள்

3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி! பணத்தை வைத்து நற்செயல்

Share

3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி! பணத்தை வைத்து நற்செயல்

பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் ‘Saving Little Hearts’ என்ற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பாடகி கூறும்போது, இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தற்போது இது தான் என் வாழ்க்கையின் லட்சியம் ஆகும்” என்று கூறினார்.

மேலும், தெருக்களில் பாடி கார்கில் வீரர்களுக்காக நிதி திரட்டிய தனது முதல் அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

அண்மையில், இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த அலோக் என்ற சிறுவனின் வீடியோவை பகிர்ந்து பிரார்த்தனை செய்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதயக் கோளாறினால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பாடகியும், அவரது சகோதரர் பாலாஷ் முச்சால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் திரட்டிய நிதியை வைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றி வருகிறார். இவர், சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார்.

அதோடு இவரை இந்திய அரசு பிற பொது நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி அங்கீகரித்துள்ளன

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...