900 சுற்றுலா பயணிகளுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்!
மலேசியாவில் இருந்து 900 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு Viking Mass பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
435 பணியாளர்களைக் கொண்ட இக்கப்பலில் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, பின்னவல, கண்டி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கப்பல் நாளை இந்தியாவுக்கு புறப்பட உள்ளதாக கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
#srilankaNews
Leave a comment