19 2
இந்தியாஉலகம்செய்திகள்

மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்

Share

மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தி வருகின்றனர். அப்போது, பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார்.

குஷ்பு பேசுகையில், “இந்த பேரணிக்கு திமுக அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம், பேரணி நடத்தினாலும் எங்களுக்கு அனுமதி கொடுப்பதே இல்லை.

அதற்கு காரணம் என்னவென்றால் நாங்கள் உண்மையை பேசுவோம் என்று திமுகவுக்கு தெரியும். அதனால் தான் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.

கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை மக்கள் கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

இதையடுத்து, தடையை மீறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...