லேபர் கட்சியை பின்னுக்குத் தள்ளிய கட்சி: ஸ்கொட்லாந்தில் எதிர்பாராத திருப்பம்

24 6685291c2d71a

லேபர் கட்சியை பின்னுக்குத் தள்ளிய கட்சி: ஸ்கொட்லாந்தில் எதிர்பாராத திருப்பம்

பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஸ்கொட்லாந்தில் லேபர் கட்சியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது ஒரு கட்சி.

பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஸ்கொட்லாந்தில் உள்ள 57 இருக்கைகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், ஸ்கொட்லாந்தில் Scottish National Party என்னும் கட்சி அதிக வாக்குகளைப் பெறும் என தெரிவித்துள்ளன.

Savanta என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், Scottish National Partyக்கு 24 இருக்கைகளும், லேபர் கட்சிக்கு 22 இருக்கைகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அங்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மூன்றாவது இடம்தான். அக்கட்சிக்கு 15 சதவிகித வாக்குகளே கிடைக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன், ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், லேபர் கட்சிக்கு 35 சதவிகித வாக்குகளும், Scottish National Partyக்கு 30 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version