கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

24 6664d7fd355c0

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளதோடு, இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 0.1 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை மே மாதம் கனேடிய பொருளாதாரத்தில் 27000 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக தொழிற்சந்தை பலவீனமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் கனேடிய மத்திய வங்கி சிறிதளவு வட்டி வீத குறைப்பினை இரண்டு தினங்களுக்கு முன்னதாக அறிவித்துள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் 15 முதல் 24 வயதுடைய இளம் பெண்களுக்கும், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், மே மாதத்தில் ஒன்டாரியோ, மனிடோபா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version