உலகம்செய்திகள்

புனித மரத்தின் அருகில் நிர்வாணமாக போஸ் கொடுத்த மாடல் அழகி கைது!

Share
download 10 1 10
Share

இந்தோனேஷியாவின் ஒரு மாகணமாக பாலி இருக்கிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தீவாக பாலி இருக்கிறது.

பிற்கால சோழர்கள் மற்றும் பிற்கால பல்லவர்கள் இந்த நிலங்களில் ஆட்சி செய்துள்ளது குறிப்பிடதக்கது. இந்த தீவில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால் அது அங்குள்ள புனித மரம் தான். சுமார் 700 ஆண்டுகள் பழமையான அந்த மரம், அங்குள்ள இந்துக்களின் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் அங்குள்ள மலைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை அம்சங்கள் கடவுளின் புனித வீடுகளாக கருதப்படுகிறது.

இந்தசூழலில் அந்த புனித மரத்தில் நிர்வாணமாக போட்டோ சூட் நடத்திய ரஷ்ய பெண் நாடு கடத்தப்பட்டது தான் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. இன்ஸ்டாகிரம் இன்புளுயன்சரான 40 வயதான லூயிசா கோசிக் எனும் ரஷ்ய பெண்மணி, அடுத்த ஆண்டு டிசம்பர் வரை செல்லுபடியாகும் தற்காலிக கோல்டன் விசாவைப் பயன்படுத்தி ஜனவரி மாதம் பாலிக்குள் நுழைந்துள்ளார்.

இந்தநிலையில் புனித மரத்தில் அந்த ரஷ்ய பெண் நிர்வாணமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதையடுத்து புனித மரத்தை கொச்சைப்படுத்தியதாக கொதித்தெழுந்த நெட்டிசன் ஒருவர், எங்கள் நிலத்தை அவமதிக்கும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். பாலி எங்கள் வீடு, அது உங்களுடையது அல்ல! எங்கள் புனித மரங்களில் நிர்வாணப் படங்களை எடுத்து நீங்கள் அழகாக இருப்பதாக காட்டிக் கொள்கிறீர்களா.? எங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உங்களால் மதிக்க முடியாவிட்டால் தயவுசெய்து உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள் என்று அவரை திட்டி தீர்த்தார்.

ஆனால் இந்த போட்டோக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்ததாகவும், அது புனித மரம் என எனக்கு தெரியாது எனவும் அந்த ரஷிய பெண்மணி கூறினாலும், அவர் கடந்த 12ம் திகதி இந்தோனேஷிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கடந்த ஞாயிற்று கிழமை ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என பாலி நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புனித மரத்தின் முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்தது இதற்கு முன்பும் ஒருமுறை நடந்துள்ளது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு, அலினா பஸ்லீவா என்ற மற்றொரு ரஷ்ய பெண், மரத்தின் மீது நிர்வாணமாக போஸ் கொடுத்தது, உள்ளூர் இந்துக்களை கடுமையாக கோபப்படுத்தியது. அதையடுத்து அந்த பெண், மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...