குவைத் மன்னர் ஷேக் நவாப் 86 வயதில் காலமானார்

1 1601392468 1601447131

குவைத் மன்னர் ஷேக் நவாப் 86 வயதில் காலமானார்

குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் (86) காலமானதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்
சுமார் 4.2 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிய அரேபிய நாடு குவைத். இது உலகில் அறியப்பட்ட 6வது பெரிய எண்ணெய் வள நாடு ஆகும்.

இங்கு, கடந்த 2020ஆம் ஆண்டு சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா மறைந்ததைத் தொடர்ந்து, ஷேக் நவாப் அல் அகமது அல் சபா மன்னராக பதவி ஏற்றார்.

குவைத்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய ஷேக் நவாப், சர்ச்சைக்கு இடமில்லாத வகையில் தெரிவானார்.

ஆனால் அவரது வயது காரணமாக குறுகிய காலம் மட்டும் அவரது பதவிக்காலம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது 86 வயதில் ஷேக் நவாப் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பட்டத்து இளவரசராக கருதப்படும் ஷேக் மெஷல் அல் அகமது அல் ஜாபர் (83), குவைத்தில் ஆட்சியராக பதியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version