சட்டவிரோதமாக இருந்த கல்குவாரியை மூடிய பெண் அதிகாரி.., மர்ம கும்பல் செய்த வெறிச்செயல்

1

சட்டவிரோதமாக இருந்த கல்குவாரியை மூடிய பெண் அதிகாரி.., மர்ம கும்பல் செய்த வெறிச்செயல்

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகளை மூட உத்தரவிட்ட அரசு பெண் அதிகாரியை மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர் பிரதிமா. இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், வேலைக்காக பெங்களூரு, தொட்டகல்லசந்திரா என்ற இடத்தில் உள்ள கோகுலா அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இவரது கணவரும், மகனும் வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். அதாவது, பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறையின் உதவி இயக்குநராக பிரதிமா பணியாற்றி வந்தார்.

பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் மீது தாக்குதல்: பொலிஸ் என ஏமாற்றிய பிரபல நடிகை கைது
பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் மீது தாக்குதல்: பொலிஸ் என ஏமாற்றிய பிரபல நடிகை கைது

இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். பின்பு, அரசு வாகனத்தில் இரவு 8.30 மணியளவில் வீட்டின் முன்பு ஓட்டுநர் இறக்கிவிட்டுள்ளார்.

அப்போது, பிரதிமா வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்து மர்ம கும்பல் அவர் வீட்டுற்குள் நுழைந்தததும், உள்ளே சென்று கத்தியால் அவரது கழுத்தை அறுத்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில்,பிரதிமாவின் அண்ணன் பிரதீஷ் பலமுறை இவருக்கு போன் செய்துள்ளார். அதை அவர் எடுக்காமல் இருக்கவே, மறுநாள் காலை 8.30 மணியளவில் நேரடியாக வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது தான் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த பிரதிமாவுக்கு ஹுனசமாரனஹள்ளி கிராமத்தில், லைசென்ஸ் பெறாமல் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவதாக புகார் வந்துள்ளது.

உடனே, அவர் அங்கு சென்று ஆய்வு நடத்தி, கல்குவாரியை மூடி அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இந்த சம்பவம் தான் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார்

Exit mobile version