Ix6A3srC1rsn7Bx4r7cI 1
உலகம்செய்திகள்

பசியோடு மருத்துவமனைக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய மான்!

Share

அமெரிக்காவில் பசியோடு இருந்த மான் ஒன்று உணவைத் தேடி மருத்துவமனைக்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா (Alaska) மாநிலத்திலுள்ள Providence Health Parkஇல் நுழைந்த மான் அங்கிருந்த செடிகளைத் தின்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுற்றி இருந்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அந்த இளம் மான் தன் செயலில் குறியாய் இருந்ததாகக் கூறப்படுகிறது.மானை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற சிலர் அதனைச் சுற்றி வளைத்தனர்.

அதன் பின்னர் அதனை மருத்துவமனையின் தானியக்கக் கதவுகளை நோக்கிச் செல்ல வைத்தனர்.இது போன்று மான் மருத்துவமனையில் நுழைவதைப் பார்ப்பது அரிது. ஆகையால் அருகில் இருந்தவர்கள் உற்சாகமாக நிழற்படங்களையும் காணொளிகளையும் எடுத்தனர், என மருத்துவமனையின் பாதுகாப்பு இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...