1 2
உலகம்செய்திகள்

புதிய CEOவை தேடும் டெஸ்லா நிறுவனம்

Share

டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

இதனால் ட்ரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும்  துறைக்கும் தலைமை வகித்திருந்தார்.

மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக  கூறப்படுகிறது.

மேலும், இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய CEOவை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...