நைஜீரியாவில் கொடூரம் : விவசாயிகள் தலை துண்டித்து கொலை
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கொடூரம் : விவசாயிகள் தலை துண்டித்து கொலை

Share

நைஜீரியாவில் கொடூரம் : விவசாயிகள் தலை துண்டித்து கொலை

நைஜீரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 விவசாயிகள் கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன் என தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய விவசாயி தெரிவித்துள்ளார்.

குறித்த தீவிரவாதிகள் நேற்று (31.07.2023) துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிலில் வந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

வயல் வேலையில் இருந்த விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்” என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறியுள்ளார்.

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...