ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது குறைந்தது 6 ராக்கெட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டன.
இதில், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், இன்று இரண்டாவது முறையாக ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment