உலகம்செய்திகள்

ஒரே இரவில் கிராமமே சுடுகாடான கொடூர சம்பவம்: வெளிவந்த உண்மை

Share
1 8 scaled
Share

மேற்கு ஆப்பிரிக்காவின் சிறிய கிராமம் ஒன்றில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே இரவில், அங்குள்ள மனிதர்கள், விலங்குகள் பறவைகள் பூச்சிகள் என மொத்தமும் மரணமடைந்த சம்பவம் தற்போதும் அங்கு திகிலை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 1986 ஆகஸ்டு 21ம் திகதி மேற்கு ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு சுமார் 9 மணிக்கு தொலைவில் எங்கோ இடி விழுந்தது போன்ற ஒரு சத்தம் கேட்டுள்ளது.

அடுத்த நாள் பகல் கண் விழித்த அந்த கிராமவாசிகளில் ஒருவர், தமக்கு அறிமுகமான அனைவரும் இறந்து போன தகவல் கேட்டு ஸ்தம்பித்து போயுள்ளார். வெறிச்சோடிய மற்றும் அமைதியான கிராமத்தின் வழியாக மயக்கமான நிலையில் நடந்தார்.

அப்போது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு, அவரை நெருங்கியுள்ளார். குறித்த பெண்ணும் இவருக்கு அறிமுகமானவர் தான், அவரது கால் அருகே அந்த பெண்ணின் பிள்ளைகள் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் 30 பேர்களின் சடலம் அப்பகுதியில் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அவர்களின் 400 கால்நடைகளும் சடலமாக மீட்டுள்ளனர்.

அந்த நாள், சடலங்களின் மீது ஈக்கள் ஏதும் மொய்க்கவில்லை என்பதையும் அந்த கிராமவாசி புரிந்துகொண்டுள்ளார். முந்தைய நால் இரவு 9 மணிக்கு யார் யார் எங்கே இருந்தார்களோ, அங்கேயே சடலாமாக கிடந்துள்ளனர்,

மொத்தம் 1,746 கிராம மக்களும் 3,500 பண்ணை விலங்குகளும் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது அருகில் உள்ள நியோஸ் ஏரியில் இருந்து கார்பன் டை ஆக்சைட் வாயு ஒரு வினோதமான சத்தத்துடன் வெளியேறியுள்ளது. மொத்தமாக 1.6 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைட் வாயு அந்த இரவில் வெளியேறியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே அந்த ஏரி அருகாமையில் குடியிருக்கும் மக்கள் மொத்தமாக மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளனர். பொதுவாக நீல வண்ணத்தில் காணப்படும் அந்த ஏரி நீர், அதன் பின்னர் ரத்த சிவப்பாக மாறியது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...