இத்தாலியின் மிலான் நகரில் ஒட்சிசன் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லொரி பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதில் அருகிலிருந்த ஏராளமான கார்கள் தீக்கிரையாகின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
வடக்கு இத்தாலியின் மிலன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள போர்டா ரோமானா பகுதியின் பையர் லோம்பார்டோ வீதியில் முதலில் ஒரு வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து அருகே இருந்த வாகனங்களிலும் தீ பரவி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பலத்த சத்தத்தால் மிலான் நகரமே அதிர்ந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 5 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன.
#world
Leave a comment