கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுத்தூபி

9 15

கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி இன்று(11) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திறந்துவைத்துள்ளார்.

இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றலுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட புலம்பெயர் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version