rtjy 225 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ கொடி

Share

பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ கொடி

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானிய தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள Tower of London என்ற கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் சுமார் 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல இடமும், பிரித்தானிய ராஜ குடும்பத்தின் கிரீடம் மற்றும் அணிகலன்களின் (crown jewels) காப்பிடமும் ஆகும்.

உலக பிரசித்தி பெற்ற Tower Bridgeல் செல்லும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய மக்களும், உல்லாசப் பயணிகளும் பல மணிநேரம் நடந்த இம்மாவீரர் வணக்கத்தைப் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயகத்தில் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டு, இன்றும் அவற்றின் எச்சங்கள் கூட இலங்கை அரசால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் லண்டன் மாநகரத்தில் இவ்வணக்கம் எந்தவித தடையும் இன்றி உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...