lTgdBnR8G1VEtfQgJE0e 1
உலகம்செய்திகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நாள்!

Share

சிங்கள  பேரினவாத அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023  பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில் பெரும் திரளான தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி நினைவு நிகழ்வும் பேரணியும் அத்துடன் கண்காட்சியும் இடம்பெற்றது.

உணர்வெழுச்சியுடன் மக்கள் பெரும் அதிர்வலையாக கோசம் எழுப்பியபடி பேரணி அன்றவெப்பன் நகரைச் சுற்றி வந்து opera plein எனுமிடத்தில் நிகழ்விற்காக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முடிவடைந்து,

வணக்க நிகழ்வு இடம் பெற்றது . 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மக்களுக்காக பொதுச்சுடரேற்றி அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தி பெல்சிய நாட்டு மொழியிலும் தமிழ் மொழியிலும்  படுகொலை பற்றி நினைவுரையாற்றப்பட்டது.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இன அழிப்பின் சிறு நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் மக்களின் பசியாற்றிய கஞ்சி அதே உணர்வுடன் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...