மாலை நேரம் மட்டும் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால்… சுவாரஸ்ய சுவிஸ் ஆய்வு

4 3

கல்வி பயிலும் மாணவ மாணவியர், மாலை நேரம் மட்டும் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தாலே, கல்வியில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடையிலுள்ள 300 மாணவ மாணவியர் ஆய்வொன்றிற்குட்படுத்தப்பட்டார்கள்.

சுவிட்சர்லாந்தில், பல வீடுகளில் பிள்ளைகள் மாலை நேரத்திலும் படுக்கையறையிலும் மொபைல் பயன்படுத்த தடைவிதிக்கும் பெற்றோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆக, பிள்ளைகளின் மொபைல் பயன்பாடு தொடர்பில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

பிள்ளைகளின் பதிலில் ஒரு முக்கிய விடயம் தெரியவந்தது. ஆம், எந்தெந்த பிள்ளைகளின் வீடுகளில் மாலை மற்றும் படுக்கையறையில் மொபைல் பயன்படுத்த பெற்றோர் தடை விதித்துள்ளார்களோ, அந்தப் பிள்ளைகள் இரவில் நீண்ட நேரம் தூங்குகிறார்கள். சுமார் 40 நிமிட கூடுதல் ஓய்வு அவர்களுக்குக் கிடைக்கிறது.

அதனால், அந்தப் பிள்ளைகள், களைப்பில்லாமல் வகுப்பில் நன்கு கவனம் செலுத்துவதாகவும், நன்கு படிப்பதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால், அதாவது, பிள்ளைகள் கட்டுப்பாடாக வளர்க்கப்படுதால், அது பிள்ளைகளின் கல்வியைப் பொருத்தவரையிலும் நன்மையையே செய்துள்ளது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Exit mobile version