5 15
உலகம்செய்திகள்

சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

Share

சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவில் இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்டதே இந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

எனினும், வெளிநாட்டினர் அதிகளவில் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகிவிட்டது. அத்துடன், அங்கு குடியேறும் மக்களுக்கு இதர வசதிகள் செய்து தருவதிலும், வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே சர்வதேச மாணவர்களுக்கு விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது.

இதன்படி, இந்த விசா திட்டங்களை 2024 நவம்பர் 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியுடன் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
01 12
செய்திகள்உலகம்

ஈரான் போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ‘டெர்மினேட்டர்’ பாணி ஆபத்து குறித்து சீனா எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில், அமெரிக்க இராணுவம் முதன்முறையாகச் செயற்கை...

27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...