சிம்பு அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR48 படத்தில் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.
அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகியும் ஷூட்டிங் தொடங்கவில்லை என்பதால் படம் ட்ராப் ஆகிவிட்டது என செய்தி சமீபத்தில் பரவியது.
சிம்புவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என அவரது ரசிகர்களும் புலப்பினார்கள்.
இந்நிலையில் ட்ராப் என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
பிப்ரவரி 2ம் தேதி STR48 பற்றி ஒரு முக்கிய அப்டேட் வரும் என தெரிவித்து இருக்கின்றனர். இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். பிப்ரவரி 3 சிம்புவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.