1 6 scaled
உலகம்செய்திகள்

பற்கள் மட்டுமே எஞ்சியது! 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர்

Share

பற்கள் மட்டுமே எஞ்சியது! 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர்

மெக்சிகோ நாட்டில் சினாலோவா போதை மருந்து கடத்தல் குழுவினரை சேர்ந்த சமையல்காரர் என அறியப்படும் ஒருவர் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த பகீர் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சினாலோவா குழுவானது உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பு என அறியப்படுகிறது. கடந்த 1980களில் இருந்தே மெக்சிகோ நாட்டின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொண்டுள்ளது.

இந்த நிலையிலேயே பொலிசார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலமாக சமையல்காரர் என அறியப்படும் Santiago Meza Lopez என்பவர் சிக்கினார். இவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மொத்த அதிகாரிகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

சினாலோவா குழு கடத்தி கொலை செய்யும் பெரும்பாலான சடலங்களை இவர் அமிலத்தில் கரைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். 1996ல் பண்ணை ஒன்றில் பணியாற்றியபோது சடலங்களை அமிலத்தில் கரைக்கும் செயலை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய பீப்பாய்க்குள் தண்ணீர் மற்றும் அமிலத்தை கலந்து உடல் பாகங்களை நிரப்பி கரைத்துள்ளனர். மட்டுமின்றி, சினாலோவா குழுவினரில் சிலருக்கு தாம் பயிற்சியும் அளித்துள்ளதாக antiago Meza Lopez தெரிவித்துள்ளார்.

இவர் கைதான பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பொலிசாரை அணுகி, தங்களின் உறவினர்களை அடையாளம் காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில், பண்ணை ஒன்றில் இருந்து 200 கிலோ அளவுக்கு மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டது.

அந்த உடல் பாகங்கள் 650 நபர்களின் மிச்சமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர். antiago Meza Lopez தெரிவிக்கையில், 300 சடலங்கள் வரையில் தாம் அமிலத்தில் கரைத்திருக்கலாம் என விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய பண்ணையில் சடலங்களை தேடுகையில் தங்களுக்கு மனிதர்களின் பற்கள் மட்டுமே கண்டெடுக்க முடிந்தது எனவும், அவை அமிலத்தில் கரைந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சினாலோவா குழு நாட்டின் பல பகுதிகளில் படுகொலை செய்யும் சடலங்களை பண்ணை ஒன்றில் அனுப்பி வைப்பதாகவும், அங்கே பெரிய பீப்பாய்களில் அமிலத்தை நிரப்பி உடல்களை கரைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மட்டுமின்றி கைதான antiago Meza Lopez-ன் வீடு மொத்தம் பெரிய பீப்பாய்களை சேகரித்து வைத்திருந்ததும் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...