உலகம்செய்திகள்

விண்வெளியில் இருந்து கீழே விழுந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்

Share
2 10
Share

எலான் மஸ்க்கின் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து விண்வெளியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச வானியலாளர் ஜொனாதன் மெக்டோவல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய தள வசதியை வழங்கி வருகிறது.

இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் ஒரு குறிப்பட்ட தொலைவில் நிலைநிறுத்தப்படும்.

ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து தீப்பற்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தினமும் நான்கு முதல் ஐந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எறிந்துவிடுவதாக வானியலாளர் ஜொனாதன் மெக்டோவல் பதிவிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...