25 68469bb92efdd
உலகம்செய்திகள்

வடக்கு பிரதேச நிலைமையை நேரில் ஆராயவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

Share

இலங்கைக்குப் பயணம்மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்(Volker Türk), வடக்குக்கும் நேரில் வந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.

இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் நிலை பற்றியும் இலங்கைப் பயணத்தின் போது அவர் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு வருகின்றார்.

26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருக்கத் திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்ட அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் கொழும்பில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரையும் இந்த விஜயத்தின் போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பு கலந்துரையாடலையும் அவர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையகச் சிவில் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போது, மலையக மக்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் சென்று, நிலைமைகளை ஆராயவுள்ளதுடன், போரின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரிட்டன் தலைமையில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...