பிரான்சில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் விடுதலை

tamilni 349

பிரான்சில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் விடுதலை

இலங்கையில் ஆபத்தான நபராக இனங்காணப்பட்ட ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் விடுதலையான பிறகு எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அவரது விடுதலையை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய குற்றச்சாட்டில் கல்கிசையில் வசிக்கும் நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் வைத்து ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பின் கீழ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version