உலகம்செய்திகள்

ஜப்பான் தடுப்பு காவலில் உயிரிழந்த இலங்கை பெண்!சிசிரிவி காட்சிகளில்அதிர்ச்சி!

Share
NxN9Gm2bofauqk6MQAFF 1
Share

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தனது மரணத்துக்கு முன்னர் அந்த பெண் முகங்கொடுத்த சம்பவங்கள் அடங்கிய பாதுகாப்பு கமரா காட்சிகள் முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நேற்று(06.04.2023) இந்த கமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையரான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி (வயது 33) ஒரு மாணவியாக 2017இல் ஜப்பானுக்கு சென்றார்.

இந்நிலையில் அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

அங்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி உயிரிழந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் விஷ்மா சந்தமாலி தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாதுகாப்பு கமராவில் பதிவான 5 மணிநேர காட்சிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

அந்த காட்சிகள் 7 நிமிட காணொளியாக சுருக்கி, டோக்கியோவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக காட்டப்பட்டுள்ளது.

விஷ்மா இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஒரு பகுதி, அவர் கட்டிலில் படுத்து இருப்பதையும், தன்னால் அசையவோ சாப்பிடவோ முடியவில்லை என்று கூறிய பிறகு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி அவர் அதிகாரிகளிடம் கெஞ்சுவதையும் காட்டுகிறது.

அவள் இறந்த நாளின் மற்றொரு காட்சியில், ஒரு அதிகாரி விஷ்மாவின் விரல் நுனியில் குளிர்ச்சியாக இருப்பதாக இண்டர்கொம் மூலம் அறிவித்த பிறகு, பதிலளிக்காத விஷ்மாவை எழுப்ப முயற்சிக்கிறார்.

விஷ்மாவின் குடும்பத்தினரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த காட்சிகளை தனிப்பட்ட முறையில் பார்க்க முடிந்தது.

இந்த காட்சிகளை வழக்கில் ஆதாரமாக அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதுடன் அதன் ஒரு பகுதி பொதுமக்களுக்கு நேற்று முதல் முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கமரா காட்சிகளுக்கமைய அவரது மரணம் மற்றும் சிகிச்சையின் மீது பல விமர்சனங்களை முன்வைத்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது.

இந்நிலையில் விஷ்மாவின் குடும்பம் அவரது மரணம் தொடர்பாக அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரியுள்ளதுடன், அவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தேவையான மருத்துவ வசதி இல்லாததால் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...