Japan arrest
உலகம்செய்திகள்

ஜப்பானில் கொள்ளைச் சம்பவம்: 30 வயது இலங்கையர் கைது!

Share

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க (30) என ஜப்பானிய ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, பெண் ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த கடன் அட்டை (Credit Card) உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஜப்பானிய நீதிமன்றங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...