பிரான்ஸில் இலங்கையர் கைது

tamilni 191

பிரான்ஸில் இலங்கையர் கைது

பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நிலையில், எல்லையோர பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாகனத்திற்குள் 280 லிட்டர் கொள்ளளவு கொண்ட 57 மதுபானங்களை வைத்திருந்தாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மதுபானங்களின் பெறுமதி 3,500 யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸிலுள்ள வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை கொண்டு வந்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்க பிரிவினால் இலங்கையருக்கு எதிராக 6700 யூரோ அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version