இலங்கைஉலகம்செய்திகள்

கியூபாவுக்கு தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை

24 665009840323c
Share

கியூபாவுக்கு தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை

அமெரிக்காவினால் (America) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை (Cuba) நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்திற்கு இலங்கை ஜனநாயக ஒன்றியங்களின் கூட்டுக் குழு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.

கியூபாவை தன்னிச்சையான பட்டியலில் சேர்ப்பது அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளதோடு கியூபா மக்களுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கியூபாவின் முழு ஒத்துழைப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும். அதேநேரம் கியூபாவை நியாயமற்ற பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இதேவேளை கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் இலங்கையின் பல்வேறு அமைப்புகள் உலகளாவிய கோரிக்கையுடன் இணைந்து கியூபாவை அநீதியான பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன.

மேலும், இலங்கையின் இடது ஜனநாயக முன்னணி மற்றும் இலங்கை – கியூபா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் ஆகியவையும் அமெரிக்க அரசாங்கம் கியூபாவிற்கு எதிராக கடைப்பிடித்து வரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...