17 9
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் நிலவும் அமைதியின்மை : இலங்கையர் தொடர்பில் தகவல்

Share

பிரித்தானியாவில் நிலவும் அமைதியின்மை : இலங்கையர் தொடர்பில் தகவல்

பிரித்தானியாவில் நிலவும் அமைதியின்மை நிலவரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கேட்டறிந்ததாகவும், பிரித்தானியா வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை நேற்று முன் தினம் (08) பிரித்தானியாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த ரோஹித்த போகொல்லாகம பிரித்தானியாவில் நிலவும் அமைதியின்மை நிலவரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது குறிப்பாக ‘பிரித்தானியாவின் சில பகுதிகளில் மக்கள் அமைதி சீர்குலைவு சம்பவங்கள் பதிவாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னிடம் கேட்டறிந்ததுடன், இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் உறுதிப்பாட்டையும் பெற்றுக்கொண்டார்

அதன்படி இதுகுறித்து நாம் பிரித்தானியா அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடிவருவதுடன், நாட்டில் மீண்டும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உத்தரவாதமளித்திருக்கிறோம்’ என உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அத்தோடு பிரித்தானியா வாழ் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறும், உள்நாட்டு செய்திகள் மற்றும் அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று பிரித்தானியாவில் பல்லின, பல்கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 750,000 இலங்கையர்கள் வாழ்வதாகவும், அவர்கள் கடந்த பல வருடகாலமாக பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்குப் பங்களிப்புச்செய்துவந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ரோஹித்த போகொல்லாகம, இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் நீண்டகாலமாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் நன்மதிப்பின் அடிப்படையிலான நல்லுறவு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் நீடித்து நிலைத்திருக்கும் ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சி ஆகிய கோட்பாடுகளை மையப்படுத்தியே அந்நாடு நிறுவப்பட்டிருக்கின்றது.

எனவே பிரித்தானியாவின் உரிய அதிகாரிகள் இந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்துவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் 1044 7475206220, 020 7262 1841 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது mail@slhc-london.co.uk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ உயர்ஸ்தானிகரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் ரோஹித்த போகொல்லாகம கேட்டுக்கொண்டார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...