13 2
உலகம்செய்திகள்

ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட பொலிசார்… நெருங்க விடாமல் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவம்

Share

ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட பொலிசார்… நெருங்க விடாமல் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவம்

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்யும் பொருட்டு கலவரத் தடுப்பு பொலிசார் ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அதிர்ச்சி திருப்பமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக பொலிசாருக்கு எதிராக இராணுவம் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூன் சுக் யோல் கடந்த மாதம் இராணுவச் சட்டத்தை அறிவித்து தென் கொரியாவை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த நிலையில், நாட்டின் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அத்துடன் அவர் மீது குற்றவியல் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த அவர் மீது நீதிமன்றம் கைதாணை வெளியிட்டது.

இந்த நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு கைதாணையை செயல்படுத்தும் விதமாக அவரது சியோல் இல்லத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இப்படியான சம்பவத்தை எதிர்பார்த்திருந்த யூன் சுக் யோல், இராணுவத்தை பயன்படுத்தி, தமக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3,000 பொலிசார் மற்றும் அதிகாரிகள் தற்போது யூன் சுக் யோல் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி கைது செய்யப்படுவது தென் கொரிய அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று. தம்மீதான கைதாணை என்பது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ள யூன், சட்டத்தின் அடிப்படையில் அதை எதிர்கொள்ள தாம் தயார் என்றும் கொந்தளித்துள்ளார்.

பகல் 7 மணி முதல் ஜனாதிபதியை கைது செய்யும் பொருட்டு அதிகாரிகள் அவரது குடியிருப்பு வளாகத்தில் நுழைந்துள்ளனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 3ம் திகதி நடந்த அதிகார அபகரிப்பு குறித்து தென் கொரிய நாடாளுமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் கதவுகளை உடைக்கவும், தேவை எனில் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தமது இராணுவ தளபதிக்கு அன்றைய நாள் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தென் கொரிய மக்களை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த இராணுவச் சட்டம் என்பது வெறும் 6 மணி நேரம் மட்டுமே அமுலில் இருந்தது. அதற்குள் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மக்கள் அளித்த அழுத்தம் காரணமாக இராணுவச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் துணிச்சலான எம்.பி.க்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்று திரண்டு, நாடளுமன்றத்தை இராணுவம் கைப்பற்றாமல் இருக்க போராடினர். அடுத்த சில மணி நேரத்தில் 190 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி யூனின் இராணுவச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்து நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் டிசம்பர் 14 அன்று ஒரு பெரும் வாக்கெடுப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அதில் அவரது சொந்த கட்சி உறுப்பினர்களும் அதற்கு வாக்களித்தனர். பிரதமர் ஹான் டக்-சூ டிசம்பர் 14 அன்று நாட்டின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் – ஆனால் அவர் டிசம்பர் 27 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...