உலகம்செய்திகள்

அமெரிக்கா நிரம்பிவிட்டது! இனி புலம்பெயர்ந்தோருக்கு இடமில்லை – செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம்

Share

தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு அமெரிக்காவில் இனி இடமில்லை என செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குளிர்கால மாதங்களில் தெற்கு எல்லையில் இடம்பெயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் டெக்ஸாஸ் நெருக்கடியின் சுமைகளைத் தாங்குவதாக கூறப்படுகிறது.

டெக்ஸாஸ் ஆளுநர் கிரேக் அபோட், ஒரு சட்டம் தொடர்பில் கையெழுத்திட்டார். இது மாநில அளவில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யவும், தடுத்து வைக்கவும் மற்றும் நாடு கடத்தவும் சட்ட அமலாக்கத்தை அனுமதிக்கிறது.

இந்த நிலையில் தெற்கு கரோலினாவின் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம், வெள்ளை மாளிகை குடியேற்ற அமைப்பு மற்றும் எல்லைக் கொள்கைகளை மாற்றியமைப்பது தொடர்பான உடன்பாட்டை எட்டினால், காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினர் உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை அனுப்ப ஒப்புக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர், நீங்கள் புகலிட விசாரணைக்காக நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தால் புகலிட அமைப்பை மெதுவாக்குவோம்.

1.7 மில்லியன் மக்கள் நாடு கடத்தப்படுவதற்கு தயாராக உள்ளனர். புதியவர்களை அனுமதிக்கும் முன் அவர்களை நாடு கடத்துவோம் என்றார்.

மேலும் பேசிய லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham), ‘அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் நிரம்பியுள்ளது. அதிகமான புலம்பெயர்ந்தோர் வெள்ளம்போல் இருப்பதால், தெற்கு எல்லையில் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு இனி இடமில்லை. எனவே அங்கு நடந்து வரும் நெருக்கடியை கையாள பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...