12 2
இந்தியாஉலகம்செய்திகள்

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

Share

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

குளிர்பானம் விஷம் என்றால் அதன் தயாரிப்பை தடை செய்யுங்கள் என்று நடிகர் ஷாருக்கான் பேசிய கருத்து பகிரப்பட்டு வருகிறது.

குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதனை குடிப்பதை யாரும் நிறுத்துவதில்லை.

அதே நேரம் குளிர்பான விளம்பரத்தில் நடிகர்கள் நடித்தால் அதற்கு விமர்சனங்கள் ஏற்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கரண் தாப்பர் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருடன் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், “குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு மோசமானது என்று நீங்கள் நினைத்தால், அதை தடை செய்யுங்கள். நம் நாட்டில் விற்க வேண்டாம். புகைபிடித்தல் மோசமானது என்றால் சிகரெட் உற்பத்தியை தொடர விடாதீர்கள்.

குளிர் பானங்கள் மோசமானவை என்று நீங்கள் நினைத்தால், அவற்றை அனுமதிக்காதீர்கள். இது நம் மக்களுக்கு விஷம் என்றால், அதை இந்தியாவில் தயாரிக்க விடாதீர்கள்.

உங்களுக்கு வருமானத்தை அளிக்கிறது என்ற காரணத்தால் அதனை நிறுத்தமாட்டீர்கள். சில தயாரிப்புகள் தீங்கு விளைவிப்பதாக நீங்கள் நினைத்தால் ஏன் நிறுத்தவில்லை, ஏனென்றால், அவை அரசாங்கத்திற்கு வருவாய்.

ஆனால், என் வருவாயை நிறுத்தாதீர்கள். நான் ஒரு நடிகர். நான் ஒரு வேலையைச் செய்து அதன் மூலம் வருமானம் பெற வேண்டும். ஏதாவது தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை நிறுத்துங்கள். எந்த பிரச்சனையும் இல்லை.

புகைப்பிடிப்பதால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மக்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்குத் தெரியும்.

படங்களில் புகைபிடிப்பதை விட மிகப்பெரிதாக இருக்கும் சுகாதாரப்பிரச்னையை கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...