tamilni 30 scaled
உலகம்செய்திகள்

இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு: சாடும் பிரித்தானிய தேர்தல் வேட்பாளரான ஈழத் தமிழ் பெண்

Share

இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு: சாடும் பிரித்தானிய தேர்தல் வேட்பாளரான ஈழத் தமிழ் பெண்

இலங்கையில் இனவழிப்பு (Sri Lankan Tamil Genocide) இடம்பெற்றதாக பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் பெண் உமா குமரன் (Uma Kumaran) குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் (United Kingdom) இடம்பெறும் பொதுத்தேர்தலில் ஆட்சியமைக்கலாம் என பலமாக நம்பப்படும் தொழிற்கட்சியானது தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

அந்தவகையில், பிரித்தானியாவின் லண்டனின் (london) புறநகர்ப் பகுதியான ஸ்டார்ட்போர்ட் மற்றும் போவ் (Stratford and Bow) தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக உமா குமரன் போட்டியிடுகின்றார்.

தமது பெற்றோர் இலங்கையிலிருந்து ஏதிலிகளாக பிரித்தானியா வருகை தந்தவர்கள் எனவும், இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தாம் நன்றாக உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் (Israel) – பாலஸ்தீன போர் தொடர்பில் கருத்து வெளியிடும் போது தாய்நாட்டில் தமது சமூகம் அனுபவித்த நெருக்கடிகள் குறித்தும் விபரித்துள்ளார்.

காசாவில் (gaza) உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...