1 3 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் ஒரே நேரத்தில் புலம்பெயர்தலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பும் ஆதரவும்

Share

ஜேர்மனியில் ஒரே நேரத்தில் புலம்பெயர்தலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பும் ஆதரவும்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த மாகாண தேர்தல்களின் முடிவுகள், ஆளும் கூட்டணிக்கு எதிராகவும், வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன.

ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதே நேரத்தில், புலம்பெயர்தலுக்கு எதிரான வலதுசாரிக்கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துவருகிறது.

ஆக, ஒரே நேரத்தில் ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அதிகரிக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது எனலாம்.

வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தில், புகலிடம் மற்றும் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களைத்தான் முன்வைத்தது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டும் ஜேர்மனியிலேயே தங்கியிருப்பவர்களை நாடுகடத்தவேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழும் அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் வேண்டுமென்றே அச்சத்தை உருவாக்கி வந்துள்ளது அக்கட்சி. ஜேர்மனியில், பல துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்த அக்கட்சி விரும்புகிறது.

அப்படியிருந்தும் அக்கட்சி, சமீபத்திய தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, மக்களில் ஒரு தரப்பினர் அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்றுதானே பொருள்?

ஆளும் கூட்டணிக் கட்சி புலம்பெயர்தலுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல, புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையில் மட்டுமே 250,000 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட அதிகம்.

ஆக, ஆளும் கூட்டணிக் கட்சிகள் புலம்பெயர்தலை ஆதரிக்கின்றன. மக்களோ, புலம்பெயர்தலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவை அதிகரித்து வருகிறார்கள். மொத்தத்தில், இப்போதைக்கு ஜேர்மனியில் புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு குழப்பமான சூழலே காணப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...