சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நபர்
சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள ஒருவர், தாக்குதலுக்கு முன் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் இந்த வாரத் துவக்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்து காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்துவதற்கு முன் அவர் தாக்குதல் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு மணி நேரம் ஓடும் அந்த வீடியோ, பல ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தன் தவறை நியாயப்படுத்தி பேசும் அந்த நபர், பல ஆண்டுகளாக தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே வீடியோவில், அவர் பின்னர் சுட்டுக்கொன்ற நபர்களின் பெயர்களையும் அவர் முன்னதாகவே குறிப்பிட்டுள்ளார்.
விடயம் என்னவென்றால், அந்த வீடியோவே அவருக்கு எதிரான சாட்சியமாக அமைய உள்ளது. அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதற்கு அந்த வீடியோ உதவக்கூடும் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.