rtjy 258 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அழுகிய நிலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு

Share

அமெரிக்காவில் அழுகிய நிலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் ‘ரிட்டர்ன் டூ நேச்சர்’ என்ற அமைப்பு இறந்த உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அந்த கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சோதனையில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட இந்த 189 உடல்களுக்கும் பதிலாக, உடல்கள் எரியூட்டப்பட்டுவிட்டதாகக் கூறி, அவர்களின் உறவினர்களுக்கு போலியாக அஸ்தி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலராடோ மாகாணத்திற்கே இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுபிறது.

Share
தொடர்புடையது
26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...

27 6
உலகம்செய்திகள்

கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண்

கனடா (Canada) நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி...

28 6
இலங்கைசெய்திகள்

இறம்பொட பேருந்து விபத்து: அரசாங்கத்தின் இழப்பீடு தொடர்பில் தகவல்

கொத்மலையில் உள்ள கரண்டியெல்ல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட...

29 5
இலங்கைசெய்திகள்

30 கோடி கேட்டதில் சிக்குவார்களா தேசபந்து மற்றும் டிரான் : நீதிமன்ற வாயிலில் வைத்து அம்பலமான இரகசியம்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு...