இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

Murder Recovered Recovered Recovered 8

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து (02) பாலி நோக்கி பயணிகள் படகு புறப்பட்டது, மேலும் 23 பேர் விபத்தில் இருந்து தப்பியுள்ளதாகவும் நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பலில் 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாகவும், 14 கனரா வாகனங்கள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாக இந்தோனேசியா தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனினும் மோசமான வானிலை காரணமாக கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Exit mobile version