பண்டைய கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்சில் உள்ள தொல்பொருள் தளமான அக்ரோபொலிசில் பாலியல் குறும்படம் காட்சியாக்கப்பட்ட விடயம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அக்ரோபோலிசில் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்வது போன்ற காட்சிகள் குறித்த டிபார்த்தினான் என்ற படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் இருந்து கண்டனங்கள் வலுத்தததையடுத்து கலாச்சார அமைச்சு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.
இது தொடர்பில் கலாச்சார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் , அக்ரோபோலிசில் படப்பிடிப்பு நடத்த அனுமதி எதுவித அனுமதியும் குறித்த படக்குழுவிற்கு அளிக்கப்படவில்லை.
அக்ரோபோலிசின் தொல்பொருள் தளமானது, சமூக செயல்பாடு மற்றும் நினைவுச்சின்னத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் எந்தவித செயல்பாடுகளுக்கும் ஏற்ற இடம் அல்ல. என்றுள்ளது.
இது தொடர்பில் படத்தின் தயாரிப்பாளர் கருத்து வெளியிடுகையில்,இது ஒரு கலைப்படைப்பு என்றும், எமக்கெதிரான அரசியல் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலிஸ், உலகின் மிகவும் பிரபலமான பண்டைய தொல்பொருள் தளங்களில் ஒன்று. உயர் பாறை அடுக்கின் மேல் உள்ள இந்த பண்டைய அரண்ஆகும்.
வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பெரும் கட்டிடக்கலையின் பண்டையக் கிரேக்கக் கட்டிடக்கலை எச்சங்களையும், குறிப்பாக பிரபலமான பார்த்தினன் கட்டிடத்தையும் கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment