26 7
உலகம்செய்திகள்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சஹாரா பாலைவனம்

Share

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சஹாரா பாலைவனம்

தென்கிழக்கு மொரோக்கோவில் பெய்த கனமழையின் தாக்கம் சஹாரா பாலைவனத்தை வெள்ளத்தில் மூழ்கச்செய்துள்ளது.

குறித்த கனமழையானது சராரியை விட அதிகம் என மொரோக்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மொரோக்கோ தலைநகர் ரபாத்தில் இருந்து 450 கிமீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் ஆரம்பமான  பருவநிலை மாற்றமானது தொடருகின்ற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம்100 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜகோராவிற்கும் டாடாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த ஆறுகள் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்ற புகைப்படங்களை மொரோக்கோ வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் அதிகளவான மழை பெய்து 30 முதல் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சஹாரா பாலைவனம், வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வெள்ளம் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புவி வெப்பமடைதல் மற்றும் தீவிர வானிலை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும்,  எதிர்காலத்தில் இந்த அளவிலான புயல்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...