இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடம் ஒன்றில் திங்கட்கிழமை (டிசம்பர் 9) அன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிச் சுமார் 17 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 அடுக்குமாடிக் கட்டடத்தில் திடீரெனத் தீ வேகமாகப் பரவியதுடன், அங்கிருந்து கரும்புகை வெளியேறியது.
தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த இந்தோனேசிய தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
தீ விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் உடல்களை மீட்புப் படையினர் வெளியே கொண்டுவரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த விபத்து குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ஹாங்காங்கில் கடந்த நவம்பர் 26ஆம் திகதி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.