Wheel Chair -ல் அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி

2 5

Wheel Chair -ல் அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ பரிசோதனை முடிந்து வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். இவருக்கு, அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

அந்தவகையில், இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், மருத்துவ பரிசோதனை முடிந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, இவருக்கு கால் மரத்துப்போனதால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், வீல் சேரில் அமரவைத்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த இவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது, செந்தில் பாலாஜி வீல் சேரில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version